டொமினிகன் அரசுத் தலைவர் மற்றும் சீனப் பிரதிநிதி சந்திப்பு
2024-08-17 16:20:07

டொமினிகன் குடியரசின் அரசுத் தலைவர் லூயிசு அபினாடரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியாக, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜின் ஜுவாங்லோங், ஆகஸ்ட் 16ஆம் நாள் சாண்டோ டொமிங்கோவில் நடைபெற்ற அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்தார். அதற்கு முன் 15ஆம் நாள், லூயிசு அபினாடர் அரசுத் தலைவர் மாளிகையில் ஜின் ஜுவாங்லோங்கைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், டொமினிகனுடன் இணைந்து, தொடர்ந்து ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து, பயனுள்ள ஒத்துழைப்பு நிலைமையை உயர்த்தி, இரு நாட்டு மக்களிடையே பரிமாற்றத்தை முன்னேற்ற விரும்புகின்றோம். மேலும், இரு நாட்டு உறவு மேலும் அதிக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

அபினாடர் கூறுகையில், சீனாவுடனான உறவை வளர்ப்பது, டொமினிகனுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சீனாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.