காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்
2024-08-17 20:13:02

காசாப் பகுதியில் போர் நிறுத்தத்துக்கான புதிய சுற்று பேச்சுவார்த்தை 15ஆம் நாள் கத்தாரின் டோஹாவில் தொடங்கியதைத் தொடர்ந்து, 16ஆம் நாள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், இப்பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் எகிப்த்தின் கைரோவில் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. நடப்பு பேச்சுவார்த்தையில், தொடர்புடைய பல்வேறு தரப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் முன்வைத்த புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதே வேளையில், இப்பேச்சுவார்த்தையின் நடுநிலை தரப்புகள் ஹமாஸ் மீது நிர்பந்தம் செய்து, போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸை கட்டாயப்படுத்துவதாக, இஸ்ரேல் கோரிக்கை விடுத்தது. தவிர, இப்பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கவனமான மற்றும் நம்பிக்கையார்வமான மனப்பான்மையைக் கொண்டதாக தெரிவித்தது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது, காசாப் பகுதி மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தவில்லை. அண்மையில், காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொது மக்கள வெளியேறுமாறு இஸ்ரேல் கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து, தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸில் வான் தாக்குதல் நடத்தப்பட்டதால், மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.