எபெக் எரியாற்றல் பணிக்குழுவின் தலைவராக சீனர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2024-08-17 20:15:09

நிறைவடைந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் எரியாற்றல் பணிக்குழுவின் 68ஆவது கூட்டத்தில், சீனா பரிந்துரை செய்தவர் இப்பணிக்குழுவின் ஆண்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனா, எபெக் எரியாற்றல் ஒத்துழைப்பு அமைப்புமுறையில் போட்டியிட்டு பொறுப்பாளராக பதவி ஏற்பது இது முதல்முறை. பல்வேறு தரப்புகள் எரியாற்றல் வளர்ச்சித்துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகளை ஏற்றுக்கொண்டதுடன் முழு உலகத்தின் எரியாற்றல் மேலாண்மையில் சீனா ஆழமாக பங்கெடுப்பதையும் இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

சீனா பணிக்குழுவின் தலைவர் பதவியைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை முன்னேற்றி, பிரதேசத்தில் தொடரவல்ல வளர்ச்சியை விரைவுப்படுத்த முயற்சிக்கும்.