இந்தியாவில் அன்னியச் செலாவணி கையிருப்பு சரிவு
2024-08-17 19:48:01

இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பானது ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவுடனான வாரத்தில் 480 கோடி டாலர் சரிந்து, 67,000 கோடி டாலரை எட்டியதாக மத்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தரவுகளின்படி அந்தவாரத்தில், அன்னியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கும்  வெளிநாட்டு நாணய சொத்துகளின் மதிப்பானது 407.9 கோடி டாலர் குறைந்து 58,796 கோடி டாலரை எட்டியது. தங்கத்தின் கையிருப்பு அளவானது 86 கோடி டலார் குறைந்து 5,923.9 கோடி டாலரை எட்டியது.

அதற்கு முந்தைய வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பின் அளவு வரலாற்றில் புதிய உயர்வான 67,491.9 கோடி டாலரை எட்டிய பிறகு, இச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.