டோலாம் சீனாவில் நண்பர்களுடன் சந்திப்பு
2024-08-18 18:18:33

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத்தலைவருமான டோலாம் ஆக்ஸ்டு 18 முதல் 20ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்கின்றார். 18ஆம் நாள் குவாங்சோவை வந்தடைந்த அவர் வியட்நாமுடனான சீனாவின் நண்பர்களைச் சந்தித்து பேசினார்.

சந்திப்புக்கூட்டத்தில் டோலாம் வியட்நாம்-சீன முந்தைய தலைவர்களிடையேயான நட்புத் தொடர்பை மீளாய்வு செய்தார். வியட்நாம்-சீனாவுடன் தோழர் மற்றும் சகோதரன் நிலையான பாரம்பரிய நட்புறவை வியட்நாம் பேணி மதிக்கிறது என்றும், சீனாவுடனான உறவின் வளர்ச்சிக்கு எப்பொழுதும் முன்னுரிமை வழங்குகிறது என்றும் டோலாம் கருத்து தெரிவித்தார்.