வியட்நாம் அரசுத் தலைவர் சீனாவில் பயணம்
2024-08-18 18:14:18

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத்தலைவருமான டோலாம் ஆக்ஸ்டு 18 முதல் 20ஆம் நாள் வரை சீனாவில் அரசுப் பயணம் மேற்கொள்கின்றார். அவர் 18ஆம் நாள் காலை சிறப்பு விமானம் மூலம் குவாங்சோவை வந்தடைந்தார்.

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளராக பதவி ஏற்றப் பின் பயணம் மேற்கொள்ளும் முதலாவது நாடு சீனா தான். குவாங்சோவில் வியட்நாமின் முன்னாள் அரசுத்தலைவர் ஹொசிமின் மேற்கொண்ட புரட்சி நடவடிக்கை பற்றிய பதிவுகளைக் காண அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், சீன-வியட்நாம் நட்புறவு பிரமுகர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.