© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பை அந்நாட்டு சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் அதிகாரி நலின் பெராரே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுலா தொடர்பான முதற்கட்ட பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தவிரவும், இரண்டாவது கட்டமாக ரஷியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி ஆகிய நாடுகளிலும் ஸ்கேண்டினேவியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சம் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.