பிலிப்பைன்ஸ் உடனடியாக ஆத்திரமூட்டலை நிறுத்த வேண்டும்:சீனா வேண்டுகோள்
2024-08-19 09:41:05

பிலிப்பைன்ஸ் கடற்காவற்துறையின் கப்பல் ஒன்று சீனாவின் ரென் அய் ஜியாவோ கடல் பகுதியில் சட்டவிரோதமாக நுழைவது பற்றி சீனக் கடல் காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் கன் யூ உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், ஆகஸ்ட் 19ஆம் நாள் சீனாவின் நான்ஷா தீவுகளில் உள்ள சியான்பின் ஜியாவோ அருகிலுள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த பின்னர், சீனா மீண்டும் எச்சரிக்கைகள் மற்றும் பாதை கட்டுப்பாடுகள் விடுத்த போதிலும், பிலிப்பைன்ஸ் கடற்காவற்துறை கப்பல் ஒன்று சீனாவின் நான்ஷா தீவுகளில் உள்ள ரென் அய் ஜியாவோ அருகிலுள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தது. பிலிப்பைன்ஸ் கப்பலுக்கு எதிராக சீன கடல் காவற்துறை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் தரப்பு உடனடியாக இது போன்ற ஆத்திரமூட்டல் செயல்பாடுகளை நிறுத்துமாறு சீனா வேண்டுகோள் விடுத்தது. இல்லையேல் இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளும் பிலிப்பைன்ஸ் தரப்பினரே ஏற்க வேண்டும்.