© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
காசா பிரதேசத்தில், இஸ்ரேல் படை வெளியிட்ட “மனித நேயப் பாதுகாப்பு மண்டல” பரப்பளவு மேலும் குறைந்து, தற்போது காசா நிலப்பரப்பில் 11 விழுக்காடு மட்டும் வகிக்கிறது என்று அண்மை கிழக்கு பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள் நிவாரணம் மற்றும் பணி முகாம் அண்மையில் சமூக ஊடகத்தில் தெரிவித்தது.
இஸ்ரேல் படை, “பாதுகாப்பு மண்டலம்” என்பதை வரைந்த போதிலும், அப்பாவி மக்களின் வீடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகச் சாக்குப்போக்கு சொல்லி, இப்பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள இலக்குகளின் மீது பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது. ஜுலை திங்கள் மவாசி பகுதியிலுள்ள பாதுகாப்பு மண்டலத்தின் மீது இஸ்ரேல் படை, வான் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோருக்கு காயம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இச்செயலுக்கு பல தரப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.