கத்தார் தலைமை அமைச்சர் ஐ.நா தலைமை செயலாளருடன் தொலைபேசி உரை
2024-08-19 10:00:42

கத்தார் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான  முகமது பின் அப்துல்ரஹ்மான் ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸுடன் ஆகஸ்ட் 18ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார். பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் மற்றும் அதன் அருகிலுள்ள பிரதேசங்களின் நிலைமை பற்றியும் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலை நிறுத்துமாறு கத்தார் உள்ளிட்ட நாடுகள் இணக்க முயற்சி செய்வதன் புதிய நிலைமை பற்றியும் இரு தரப்பினரும் முக்கியமாக விவாதித்தனர்.

பிரதேசத்தின் பதற்றமான நிலைமையைத் தணிவுபடுத்தி அமைதியைப் பேணிக்காப்பதற்கான முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். பாலஸ்தீன பிரச்சினைக்குப் பன்முகமான நியாயமான மற்றும் நிலையான தீர்வு காண்பதில் கத்தார் மேற்கொண்டுள்ள தூதாண்மை முயற்சிகளுக்கு குட்ரேஸ் பாராட்டு தெரிவித்தார்.