யசுகுனி கல்லறையில் இரங்கல் தெரிவித்த செயலுக்குச் சீனா கடும் எதிர்ப்பு
2024-08-19 10:14:59

ஜப்பான் தலைமையமைச்சர் கிஷிடா ஃபுமியோ, குறிப்பிட்ட சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் யசுகுனி கல்லறைக்குச் சென்று இரங்கல் தெரிவித்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியேன் ஆகஸ்ட் 15ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இது தொடர்பாக சீனா ஜப்பானுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஜப்பான் ஆக்கிரமிப்பு வரலாற்றை சரிவர நோக்கி, மறு ஆய்வு செய்வதற்கான தனது மனப்பான்மை மற்றும் உறுதிப்பாட்டைப் பின்பற்றுமாறு சீனா வேண்டுகோள் விடுத்தது. யசுகுனி கல்லறை உள்ளிட்ட வரலாற்று பிரச்சினைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஜப்பான் இராணுவவாதத்துடனான தொடர்பை முழுமையாக வெட்டிப் பிரித்து, அமைதியான வளர்ச்சியின் பாதையில் உறுதியுடன் நடைபோட்டு, நடைமுறை நடவடிக்கைகளுடன் ஆசிய அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றார்.