கோலாகலமான 8வது தீப்பந்த திருவிழா
2024-08-19 09:42:27

ஆகஸ்ட் 18ம் நாளிரவு சீனாவின் லுன் ஷன் நகரின் மா பியேன் யீ இனத்தின் 8வது தீப்பந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. பல்வேறு இடங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும், இங்கு நடைபெற்ற சிறப்பு விருந்தில், தனிச்சிறப்பு வாய்ந்த யீ இனப் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் கூட்டாக அனுபவித்து மகிழ்ந்தனர்.

தீப்பந்த திருவிழா யீ இனத்தின் மிக முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்று. நடப்பு தீப்பந்த திருவிழா காலத்தில் மல்யுத்தப் போட்டி, யீ இன பூத்தையல் கண்காட்சி, கார்னிவல் இரவு முதலிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.