புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்லாந்து தலைமையமைச்சருக்கு சீனா வாழ்த்து
2024-08-19 09:45:12

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 16ஆம் நாள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்லாந்து தலைமையமைச்சர் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். புதிய தலைமையமைச்சர் பதவி ஏற்றுள்ள பாட்டோங்க்தார்ன் சினாவத்ரா அம்மையாருக்கு சீனா வாழ்த்து தெரிவித்தது. சொந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பாதையில், தாய்லாந்து மக்கள் புதிய மேலதிகமான முன்னேற்றமடைவர் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

16ஆம் நாள், பாட்டோங்க்தார்ன் சினாவத்ரா அம்மையார் தாய்லாந்தின் 31ஆவது தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மேலும் கூறுகையில்,

2025ஆம் ஆண்டு, சீன-தாய்லாந்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது நிறைவாகும். இரு தரப்புறவு, புதிய வரலாற்று வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்நோக்கும். தாய்லாந்துடன் இணைந்து, நட்புறவை ஆழமாக்கி, நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, சீன-தாய்லாந்து பொது சமூக கட்டுமானத்தை தொடர்ந்து விரைவுபடுத்த சீனா விரும்புகிறது என்றார்.