சீன-அமெரிக்க நிதிப் பணிக் குழுவின் 5ஆவது கூட்டத்தொடர்
2024-08-19 14:42:51

சீன-அமெரிக்க நிதிப் பணிக் குழுவின் 5ஆவது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 15,16 நாட்களில், சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீன மத்திய வங்கியின் துணைத் தலைவர் சுன்சாங்நெங், அமெரிக்க நிதி துறையின் துணை அமைச்சர் ப்ரெண்ட் நைமன் Brent Neiman இருவரும் இக்கூட்டத்திற்குக் கூட்டாக தலைமை தாங்கினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வில் வெளியிட்டப்பட்ட, மேலும் பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய ஒட்டுமொத்த ஏற்பாடுகள், சீன-அமெரிக்க பொருளாதார, நாணய நிலைமை மற்றும் நாணயக் கொள்கை, நாணய நிதானம் மற்றும் கண்காணிப்பு, பங்கு மற்றும் மூலதனச் சந்தை, இரு தரப்புகள் கூட்டு அக்கறை கொண்ட நாணய கொள்கை முதலியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர்.

சீன-அமெரிக்க நிதிப் பணிக் குழுவின் முதலாவது வட்ட மேசை கூட்டமும் இதில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இரு நாட்டு நாணய நிறுவனங்கள் தொடரவல்ல நிதித் துறையில் கவனம் செலுத்தி, இரு தரப்புகளுக்கிடையில் உள்ளார்ந்த ஒத்துழைப்பு,  வாய்ப்புப் குறித்தும் விவாதித்தன.