காசா போர் நிறுத்த அமெரிக்கா நேர்மையற்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா
2024-08-19 19:26:28

காசா போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில், அமெரிக்கா நேர்மையான மன்பான்மையுடன் பங்கெடுக்கவில்லை என்று கருதுவதாக ஈரான்தெரிவித்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசியல், இராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றது என்றும், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அமெரிக்கா பலமுறை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தவிர, இஸ்ரேல் தெஹ்ரானிலேயே ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஹானியாவை மறைமுகமாக கொலை செய்ததால், இஸ்ரேலை தண்டிக்கும் உரிமை ஈரான் கொண்டுள்ளது. இதற்கும், காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையுடன் தொடர்பு ஏதும் இல்லை. இஸ்ரேலின் செயலை எதிர்கொள்ளும்போது, ஈரான் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.