ரஷியா, பெலாரஸில் சீனத் தலைமையமைச்சர் பயணம்
2024-08-19 19:47:56

ரஷியா மற்றும் பெலாரஸின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் ஆகஸ்ட் 20முதல் 23ஆம் நாள், ரஷியாவில் நடைபெறவுள்ள சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் 29ஆவது குறிப்பிட்ட சந்திப்பில் பங்கெடுப்பதுடன், இரு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் 19ஆம் நாள் தெரிவித்தது.

சீன மற்றும் ரஷிய தலைமையமைச்சர்களுக்கிடையே நடைபெறும் இச்சந்திப்பு, இரு நாட்டு தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தவும், இரு தரப்புகளுக்கிடையே மக்கள் தொடர்பை முன்னேற்றவும் அமைக்கப்பட்ட முக்கிய அமைப்புமுறையாகும். 1996ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. ரஷியப் பயணத்தின்போது, சீன மற்றும் ரஷிய தலைமையமைச்சர்கள், இரு தரப்புறவு, பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும், பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறி கொள்வர். தவிரவும், பெலாரஸ் பயணத்தின்போது, அந்நாட்டு தலைமையமைச்சர் க்ரோவ்சென்கோவுடன் லீச்சியாங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.