செப்டம்பரில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு
2024-08-20 18:44:23

2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு செப்டம்பர் 4முதல் 6ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது என்றும், கடந்த ஆண்டுகளில், சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே பயனுள்ள ஒத்துழைப்பு மூலம் அதிக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன என்றும், சீன வணிகத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீன அரசவை 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே முதலீட்டு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நிலையாக வளர்ந்துள்ளது. துறைமுகம், நெடுஞ்சாலை, ஒளிமின்னழுத்த உற்பத்தி நிலையம், வீட்டு உபகரண பொருள்கள் தயாரிப்பு ஆலை போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் தயாரிப்பு தொழிலுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் நைஜீரியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்திய பிறகு பொருளாதார நலனை ஏற்படுத்தியுள்ளன. சீனா ஆப்பிரிக்காவுக்கு 500க்கும் மேற்பட்ட வேளாண்மைத் துறை நிபுணர்களை அனைப்பி, சுமார் 9ஆயிரம் பேருக்கு வேளாண்மை தொடர்பான பயிற்சியை அளித்துள்ளது. தவிர, சீனத் தொழில் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் அதிக தூய்மையான ஆற்றல் திட்டப்பணிகளைச் செயல்படுத்தி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.