செசல் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி
2024-08-20 10:24:53

செசல் அரசுத் தலைவர் வாவல் ராம்கலவன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், செசல்-சீன உறவு வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் செசல் பங்கெடுத்து பலவிதமான நலன்களைப் பெற்றுள்ளது. சீனா, ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது. இம்முன்மொழிவின் எதிர்காலம், ஒளிமயமானதாகவும் தொடர வல்லதாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு உச்சிமாநாடு இவ்வாண்டில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இது குறித்து ராம்கலவன் தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், செசல், சீனாவுடன் நிலையான ஒத்துழைப்பு உறவை நிறுவியுள்ளது. மருத்துவம், கல்வி, மனிதத் தொடர்பு மற்றும் வணிகத் துறைகளில் மேலதிக வாய்ப்புகள் கிடைத்தால், இருத்தரப்பும் வெற்றி பெறுவது உறுதி என்று குறிப்பிட்டார்.

மேலும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நாகரிக முன்மொழிவுகள், உலகின் தேவைகளுக்குப் பொருந்தியவை. சீனா, பல்வேறு நடவடிக்கைகளிலும் இம்முன்மொழிவுகளைச் செயல்படுத்தினால், மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் தெரிவித்தார்.