© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசு அனுமதியின்றி பிலிப்பைன்ஸ் கடற்காவற்துறையின் இரண்டு கப்பல்கள் 19ஆம் நாள் விடியற்காலை சீனாவின் நான்ஷா தீவுகளில் உள்ள சியான்பின் ஜியாவோ அருகிலுள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளன. பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு, சீனா பலமுறை விடுத்த தடைகளையும் எச்சரிக்கைகளையும் இக்கப்பல்கள் புறக்கணித்து, சீன கடல் காவல்துறையின் கப்பல்கள் மீது வேண்டுமென்றே மோதின. இதன் விளைவாக மோதல் ஏற்பட்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சட்டத்தின் படி, சீனக் கடல் காவல்துறை பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்செயல் சிறப்பாகவும் கவனமாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றது.
இந்த மோதல் சம்பவத்துக்குப் பிலிப்பைன்ஸ் பொறுப்பேற்க வேண்டும். தென் சீனக் கடலில் பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தை மீண்டும் சேதப்படுத்தும் நடவடிக்கையை பிலிப்பைன்ஸ் செய்துள்ளது.
தென் சீனக் கடல் தீவுகள் மற்றும் பாறைகளில் சீனாவுக்கு எதிராக தொடர்ச்சியான உரிமை மீறல் மற்றும் ஆத்திரமூட்டல் மூலம் உள்நாட்டு அழுத்தத்தைத் தணிவு செய்யும் வகையில், பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள் உள்நாட்டு முரண்பாடுகளையும் கவனத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
சர்வதேச காரணிகளின் கண்ணோட்டத்தில், வெளிநாட்டு நாடுகளின் தூண்டுதலின் கீழ், பிலிப்பைன்ஸ் தீவிர இராணுவ நடவடிக்கைகளின் மூலம் விசுவாசத்தை வெளிப்படுத்தி, பிலிப்பைன்ஸின் மீதான முதலீட்டை அதிகரிக்க விரும்புகின்றது. சீனாவைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளின் ஒரு கருவியாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.