சீனா எப்போதும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் உறுதியான ஆதரவாளர்
2024-08-20 10:04:44

ஜெனிவாவில் நடைபெற்ற ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் 10ஆவது மாநாட்டில் ஆயுத குறைப்புக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஷேன் ஜியேன் ஆகஸ்ட் 19ஆம் நாள் கலந்து கொண்டார்.

அதில் அவர் உரைநிகழ்த்துகையில், 2020ஆம் ஆண்டு சீனா இந்த ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்தது. உலக நிர்வாக அமைப்பு முறையைப் பேணிக்காப்பது, பலதரப்புவாதத்தை ஆதரிப்பது, மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது ஆகியவற்றுக்கான சீனாவின் நேர்மையையும் மனவுறுதியையும் இது முழுமையாகக் காட்டியுள்ளது. மோதலுக்குள்ளான பிரதேசத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்ற செயல்களை மேற்கொள்வதைச் சீனா எதிர்க்கிறது. ஆயுத வர்த்தக விவகாரம் அல்லது ஒப்பந்தத்தை அரசியல்மயமாக்குவதற்கும் அல்லது கருவியாகப் பயன்படுத்துவதையும் சீனா எதிர்க்கிறது. பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று கூட்டு பாதுகாப்பை முன்னேற்ற வேண்டும். ஒப்பந்த கோட்பாடுகளைக் கடைப்பிடித்து நாட்டின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை நெருக்கமாக்கி உலக நிர்வாகத்தை முழுமைப்படுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியதாக ஷேன் ஜியேன் தெரிவித்தார்.