சூடானில் வெள்ளப் பெருக்கினால் மனித நேய நடவடிக்கை பாதிப்பு
2024-08-20 15:21:49

ஐ﹒நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் 19ஆம் நாள் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இவ்வாண்டின் ஜூலை திங்கள் முதல் இது வரை, சூடானின் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. வெள்ளத்தில் அதிகமான நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், நாட்டில் மனித நேய மீட்புதவி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேலான லாரிகள் இந்நாட்டின் பல பிரதேசங்களில் தேங்கியுள்ளன. இந்த லாரிகள் மூலம் 4800 டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்று, 5 இலட்சம் மக்களுக்கு உதவி அளிக்க முடியும்.

தவிரவும், தற்போது, அந்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சுமார் 36 இலட்சம் குழந்தைகள், 12 இலட்சம் கர்ப்பிகள், பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.