6ஆவது சீன-ஆப்பிரிக்க ஊடக ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் தொடக்கம்
2024-08-21 19:57:38

6ஆவது சீன-ஆப்பிரிக்க ஊடக ஒத்துழைப்பு மன்றக்கூட்டமும், சீன-ஆப்பிரிக்க சிந்தனை கிடங்கின் உயர் நிலை பேச்சுவார்த்தையும் ஆகஸ்ட் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ சுலெய் துவக்கவிழாவில் உரைநிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் கூறுகையில், நடைபெறவுள்ள சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு, சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான நட்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் மற்றொரு பெரிய நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

தவிர, மன்றக் கூட்டத்தில், சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே வானொலி, தொலைக்காட்சி, காணொளி போன்ற துறைகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், 20 ஒத்துழைப்பு திட்டப்பணிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், "நட்பு மற்றும் ஒத்துழைப்பு" எனும் சாதனை கண்காட்சி உள்ளிட்ட நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.