மியான்மார் விவகாரத்துக்கான ஐ.நா தலைமை செயலாளரின் சிறப்புத் தூதரை வாங்யீ சந்திப்பு
2024-08-21 15:28:03

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஆகஸ்ட் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் மியான்மார் விவகாரத்துக்கான ஐ.நா தலைமை செயலாளரின் சிறப்புத் தூதர் ஜூலி இசபெல் பிஷபைச் சந்தித்துரையாடினார்.

வாங்யீ கூறுகையில், மியான்மார் விவகாரத்தில், மியான்மாரின் இறையாண்மை, சுதந்திரம், நாடு மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிப்பதில் சீனத் தரப்பு ஊன்றி நிற்கும். உள்விவகாரத்தில் தலையிடாததில் சீனா ஊன்றி நிற்கும். மேலும், மியான்மார் மக்களுக்குச் சொந்தமானது மற்றும் மியான்மார் மக்கள் தலைமை தாங்குகிற அமைதி முன்னேற்றப் போக்கில் சீனா ஊன்றி நிற்கும் என்றார்.

மியான்மார் விவகாரத்துக்கான ஐ.நா தலைமை செயலாளரின் சிறப்புத் தூதரின் பங்களிப்பு மிக சிறப்பாக இருக்கும். முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளது. மியான்மார் அரசியல் நல்லிணக்கத்தையும் நீண்டகால அமைதி மற்றும் நிதானத்தை நனவாக்கும் வகையில், கடமைகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கு ஆதரவு மற்றும் உதவியைச் சீனா வழங்க விரும்புவதாகவும் வாங்யீ தெரிவித்தார்.