சீன-ரஷிய பன்முக ஒத்துழைப்பு தொடரும்: சீன-ரஷிய தலைவர்கள்
2024-08-22 09:17:17

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 21ஆம் நாள் பிற்பகல், மாஸ்கோவில் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் சந்தித்துரையாடினார்.

ரஷிய தரப்புடன் இணைந்து, இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் முக்கிய ஒருமிக்க கருத்துக்களைச் சீராக நடைமுறைப்படுத்த வேண்டும். இரு தரப்புறவின் சீரான வளர்ச்சி முன்னேற்றப் போக்கை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். பன்முக, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, பயனுள்ள சாதனைகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று லிச்சியாங் தெரிவித்தார்.

சீனத் தரைப்புடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். பல தரப்பு கட்டமைப்புக்குள் தொடர்புகளையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிக்க வேண்டும். தவிரவும், புதிய யுகத்தில் இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவில் மேலும் முக்கிய முன்னேற்றங்களைப் பெற விரைவுபடுத்த வேண்டும் என்று புதின் தெரிவித்தார்.