சர்வேதச அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் ஒத்தபழைப்புக்குச் சீனா எப்போதும் பாடுபடு
2024-08-22 17:35:55

அண்மையில், 2024ஆம் ஆண்டு மேற்கு பசிபிக் சர்வதேச ஆய்வுப் பயணக் குழு 45 நாட்கள் நீடிக்கும் கடல் ஆய்வைத் தொடங்கியது. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் முதன்முறையாக ஜியாவோ லாங் நீர் மூழ்கிக் கப்பல், கடலில் ஆய்வுப் பயணம் மேற்கொள்வது இந்த பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நிங் அம்மையார் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளில், ஆழ்கடலில் சீனா அறிவியல் ஆய்வை மேற்கொண்டு வருவதுடன், பல நாடுகளுடன் கூட்டு அறிவியல் பயணங்களையும் நடத்தி வருகின்றது. கடல் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது என்றார்.

மேலும் சர்வதேச அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பை மேற்கொள்ளச் சீனா எப்போதும் பாடுபட்டு வருகின்றது. 160க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உறவை உருவாக்கி, அரசுகளுக்கிடையேயான 118 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு எல்லைகள் இல்லை. பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை ஆழமாக்கி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கத்தின் மூலம் பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, அனைத்து மனிதகுலத்திற்கும் நன்மை புரிய சீனா விரும்புகின்றது என்றார்.