© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தோழர் டெங் சியெவ்பிங் 120ஆவது பிறந்த ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி 22ஆம் நாள் காலை மக்கள் மாமண்டபத்தில் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசு தலைவரும், மத்திய ராணுவ கமிட்டித் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
தோழர் டெங் சியெவ்பிங் சீனச் சோஷலிச சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு, நவீனமயமாக்க கட்டுமானம் ஆகியவற்றின் தலைமை வடிவமைப்பாளராகவும், சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச பாதையைத் துவக்கியவராகவும் திகழ்கிறார். அவருடைய சாதனை சீனாவுக்கு மட்டுமல்லாமல், உலகளவில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் நீண்டகாலமாகவும் நிலைத்துள்ளது. அவர் துவக்கிய சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னேற்றுவது என்பது அவர் அவரை நினைவுக்கூர்ந்து அளிக்கும் சிறப்பு மரியாதையாகும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
உலக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்த்திருத்த மற்றும் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து சீன நவீனமயமாக்கத்தின் புதிய முன்னேற்றங்களைப் பயன்படுத்தி உலகிற்கு புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.