சீனத் தலைமையமைச்சரின் பெலாரஸ் பயணம் தொடக்கம்
2024-08-22 19:28:33

பெலாரஸ் தலைமையமைச்சர் ரோமன் கோலோவ்சென்கோ அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் 22ஆம் நாள் காலை மின்ஸ்க் சென்றடைந்து, அந்நாட்டில் அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கினார்.

லீ ச்சியாங் கூறுகையில், இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 32ஆண்டுகளில், இரு தரப்புறவு விரைவான வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் அக்கறையுடன், சீன-பெலாரஸ் உறவு தொடர்ந்து வலுவாகியுள்ளது. அத்துடன், ஒரு புதிய சகாப்தத்தில் அனைத்து காலத்துக்குமான விரிவான நெடுநோக்குக் கூட்டாண்மையையும் உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

பெலாரஸுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, இரு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களை இணைத்து, பரஸ்பரம் பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.