சீன-பூடான் எல்லைப் பிரச்சினைக்கான நிபுணர்கள் குழுக்களின் 14ஆவது கூட்டம்
2024-08-22 19:51:33

சீன-பூடான் எல்லைப் பிரச்சினைக்கான நிபுணர்கள் குழுக்களின் 14ஆவது கூட்டம், ஆகஸ்ட் 20முதல் 22ஆம் நாள், பூடானின் திம்புவில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் விவகாரத் துறைத் தலைவர் ஹொங் லியாங், பூடானின் சர்வதேச எல்லை விவகாரத் துறைத் தலைமைச்செயலாளர் லெடோ டான்பி ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டு எல்லைப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் பெறப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை மீளாய்வு செய்த பின், இரு தரப்பும் பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகள் குறித்து நட்புபூர்வமான முறையிலும் மனப்பான்மையுடனும் விவாதம் நடத்தின.