ஷிச்சின்பிங் பிரிட்டன் தலைமையமைச்சருடன் தொலைபேசி மூலம் தொடர்பு
2024-08-23 19:39:43

ஆகஸ்ட் 23ஆம் நாள் மாலை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பிரிட்டன் தலைமையமைச்சர் கெய்ர் ஸ்டார்மெருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டர். அப்போது பிரிட்டனின் தலைமையமைச்சராக பதவி ஏற்றுள்ளதற்கு ஸ்டார்மெருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார். தற்போது சர்வதேச நிலைமை மோசமாகவுள்ளது. சீனாவும் பிரிட்டனும் ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர அங்க நாடுகளாகவும் உலகின் முக்கிய பொருளாதாரங்களாவும் உள்ளன. நீண்டகால மற்றும் நெடுநோக்குப் பார்வையில் இருநாட்டுறவை அணுக வேண்டும். பேச்சுவார்த்தை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிதானமாக ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் உறவுடன் இருநாடுகளுக்கும் முழு உலகிற்கும் நன்மை தர வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

ஸ்டார்மெர் பேசுகையில் சீனாவுடன் பல்வேறு நிலையான தொடர்பையும் பேச்சுவார்த்தையும் வலுப்படுத்தி, இருநாடுகளிடையே பயனுள்ள ஒத்துழைப்பையும் அமைப்புமுறையிலான பரிமாற்றத்தையும் விரைவுபடுத்தி, ஒன்றுக்கொன்று மதிப்புடன் நீண்டகாலமான நிதானமான நெடுநோக்குத்துவம் வாய்ந்த பிரிட்டன்-சீன உறவை வளர வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். மேலும், ஒரே சீனா என்பதைக் கடைபிடிக்கும் பிரிட்டனின் நிலைபாடு மாறாது என்றும் ஸ்டார்மெர் மீண்டும் வலியுறுத்தினார்.