சீன மற்றும் பெலாரஸ் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2024-08-23 10:28:04

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஆகஸ்ட் 22ஆம் நாள் பிற்பகல் பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் அந்நாட்டுத் தலைமையமைச்சர் ரோமன் கோலோவ்சென்கோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

இப்பேச்சுவார்த்தையின் போது லீ ச்சியாங் கூறுகையில், பெலாரஸுடன் இணைந்து, தத்தமது முக்கிய நலன்களைப் பேணிக்காப்பதை உறுதியாக ஆதரித்து, பல்வேறு துறைகளுடனான ஒத்துழைப்பை இடைவிடாமல் ஆழமாக்குவதை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார். மேலும், பெலாரஸுடன் இணைந்து, ஐ.நா. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முதலிய பலதரப்பு அமைப்பு முறைகளிலுள்ள பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, மூன்று உலக முன்மொழிவுகளை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தின் நடைமுறையை முன்னேற்றி, மனித குலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தைக் கையோடு கை கோர்த்து உருவாக்கச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனையடுத்து 2024ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான சீன-பெலாரஸ் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் துவங்கியதாக இருநாட்டுத் தலைமையமைச்சர்களும்  கூட்டாக அறிவித்தனர். இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன மக்கள் குடியரசுக்கும் பெலாரஸ் குடியரசுக்குமிடையிலான கூட்டறிக்கையில் இரு நாட்டுத் தலைமையமைச்சர்கள் கையொப்பமிட்டனர்.