காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் தொடர்ந்து பங்காற்றுவோம்:சீனா
2024-08-23 19:45:05

புதிய ஆற்றல் தொழிலின் விரைவான வளர்ச்சி காரணமாக, உலக அளவில் எரியாற்றல் செலவை விரைவாகக் குறைத்து வரும் நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது என்றும்,சீனாவில் பசுமை வளர்ச்சிக்காக பாடுபட்டு வருவதோடு, காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் முழு உலக மேலாண்மையை மேம்படுத்தவும் தொடர்ந்து பங்கு ஆற்றும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 23ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவில் புதிதாக அதிகரித்த தூய ஆற்றல் மூலம் கிடைத்த மின்சார உற்பத்தி அளவு, கடந்டை விட பிரிட்டனின் மின்சார உற்பத்தியின் மொத்த அளவுக்கு ஈடாக இருந்தது என்று சில வெளிநாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மெளநீங் கூறுகையில்,

உலகளவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் முழுமையான புதிய ஆற்றல் தொழில் சங்கிலி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளவில் 70விழுக்காட்டு ஒளிமின்னழுத்த சாதன பாகங்களையும், 60விழுக்காட்டு காற்றாற்றல் மின்னாக்கி உபகரணங்களையும் சீனா வழங்கி வருகின்றது. இது, உலகளவில் ஆற்றல் பயன்பாட்டின் மேம்பாட்டுக்கும் குறைந்த கார்பன் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் முக்கிய உந்து சக்தி வழங்குகின்றது. குறிப்பாக, சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகள், உலகளாவிய தெற்கு நாடுகளின் பசுமை வளர்ச்சிக்கு உதவி அளித்து, உள்ளூர் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றன என்று மெளநீங் தெரிவித்தார்.