சீன மின்சார வாகனம் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்புப் புலனாய்வு குறித்து ஐரோப்பிய ஒன்றியச் செயற்குழுவின் இறுதி வெளிப்பாடு
2024-08-23 11:18:22

சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்புப் புலனாய்வின் இறுதி வெளிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய செயற்குழு ஆகஸ்ட் 20ஆம் நாள் வெளியிட்டது. இது குறித்து சர்வதேச சமூகம் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தச் சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு, நியாய வர்த்தகம் என்பதைச் சாக்குபோக்காகக் கொண்டு பாதுகாப்புவாதத்தைச் செயல்படுத்துவதாகும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார வாகனத் தொழிலின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்பினால், போட்டியிடுவதற்குப் பயப்பட வேண்டாம் என்றும் பல ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், வாகனத் தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், சிந்தனை கிடங்குகள், அறிஞர்கள் முதலியோர் கருத்து தெரிவித்தனர்.

உண்மையில், புதிய சுற்று காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது மற்றும் பசுமை வளர்ச்சி மாற்றத்தை நனவாக்கும் பணியில் உலகளவிலான போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டே ஐரோப்பிய ஒன்றியம் இச்செயலை மேற்கொண்டுள்ளது.