இவ்வாண்டின் முதல் ஏழு திங்களில் சீனாவின் நீர் சேமிப்பு கட்டுமானத்திற்கான ஒதுக்கீடு
2024-08-24 19:53:32

சீனாவில் நீர் சேமிப்புக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானம் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. சீன நீர் வள அமைச்சகம் ஆகஸ்ட் 23ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை திங்கள் வரை, சீனாவில் நீர் சேமிப்பு வசதிகளின் கட்டுமானத்துக்கு 68 ஆயிரத்து 940 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.8 விழுக்காடு அதிகமாகும்.

இவ்வாண்டின் முதல் ஏழு திங்களில் சீனாவில் 40 ஆயிரம் நீர் சேமிப்புத் திட்டப்பணிகள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் 26 ஆயிரம் திட்டப்பணிகள் புதிதாக துவக்கப்பட்டு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 23.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மேலும், நீர் சேமிப்புக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானம், வேலை வாய்ப்புகள் மற்றும் வருவாயின் அதிகரிப்பை விரைவுபடுத்தியுள்ளது. இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை திங்கள் வரை, நாடு முழுவதிலும் உள்ள நீர் சேமிப்புத் திட்டப்பணிகள், 16 லட்சத்து 83 ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.