போ ஹாய் கடலில் மொத்த உற்பத்தி அளவு நூறு கோடி கனமீட்டரைத் தாண்டிய இயற்கை எரிவாயு வயல்
2024-08-24 19:52:36

சீன கடல் பெட்ரோலியக் குழுமம் ஆகஸ்ட் 24ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவின் போ ஹாய் கடலில் முதலாவது பத்தாயிரம் கோடி கனமீட்டர் அளவிலான பெரிய இயற்கை எரிவாயு வயலான போ ட்சுங் 19-6 இயற்கை எரிவாயு வயலின் மொத்த உற்பத்தி அளவு, நூறு கோடி கனமீட்டரை எட்டியுள்ளது.

இந்த இயற்கை எரிவாயு வயல், போ ஹாய் கடலின் மத்திய கடற்பரப்பில் அமைந்துள்ளது. இதில் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு படிவு 20 ஆயிரம் கோடி கனமீட்டரையும், எண்ணெய் படிவு 20 கோடி கனமீட்டரையும் தாண்டியுள்ளது. தற்போது இந்த வயலில் 6 கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மேடைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இயற்கை எரிவாயுவின் தினசரி உற்பத்தி அளவு மிக அதிகபட்சமாக 24 லட்சம் கனமீட்டரை எட்டியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய் மற்றும் போ ஹாய் கடல் சுற்றியுள்ள பிரதேசத்தின் இயற்கை எரிவாயு தேவையை நிறைவு செய்து, நாட்டின் எரியாற்றல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, எரியாற்றல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த இயற்கை எரிவாயு வயல் முக்கியத்துவம் வாய்ந்தது.