© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ரஷிய விவகாரத்துடன் தொடர்புடையவை என்ற சாக்குபோக்கில், சீனாவின் பல தொழில் நிறுவனங்களை, ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல், சர்வதேச வர்த்தக ஒழுங்கு மற்றும் விதிமுறையைச் சீர்க்குலைத்து, இயல்பான சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்தைத் தாமதப்படுத்தி, உலக உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியின் நிலைத்தன்மையைப் பாதித்துள்ளது. இதற்கு சீனா உறுதியுடன் மனநிறைவின்மை மற்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தத் தவறான செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, இன்றியமையாத நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீனத் தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களையும் உறுதியாகப் பேணிக்காக்கும் என்று தெரிவித்தார்.