லெபனான் மீது இஸ்ரேலின் பெருமளவிலான வான் தாக்குதல்
2024-08-25 19:06:32

இஸ்ரேல் போர் விமானங்களும் ஆளில்லா விமானங்களும் ஆகஸ்ட் 25ஆம் நாள் லெபனானின் 23 நகரங்களின் மீது 35 முறை வான் தாக்குதல் நடத்தின. அதே வேளையில் இஸ்ரேல் சுமார் 70 ஏவுகணைகளைச் செலுத்தி, லெபனானின் 19 நகரங்களின் மீது சுமார் 50 பீரங்கி குண்டுகளை வீசின என்று லெபனான் ராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

25ஆம் நாள் விடியற்காலை முதல் லெபனானின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் உள்ளூர் வீடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண் பயிர்கள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டுள்ளன என்று லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

லெபனான் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் உயர் நிலை ராணுவ ஆணையாளர் ஃபோயத் ஷோகோரை இஸ்ரேல் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் வகையில் 25ஆம் நாள் இஸ்ரேலின் மீது பெருமளவிலான தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லாஹ் அறிவித்தது.