ஐ.நா தலைமைச் செயலாளர், சூடான் அரசுரிமை கமிட்டியின் தலைவருடன் தொடர்பு
2024-08-25 19:29:10

ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, அன்டோனியோ குட்ரேஸ் சூடான் அரசுரிமை கமிட்டியின் தலைவரும், ஆயுதப் படையின் முதன்மை தலைவருமான பூர்ஹானுடன் ஆகஸ்டு 24ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

ஆர்ட்லி எல்லை நுழைவாயிலின் வழியாக மனித நேய உதவி பொருட்களை அனுப்புவது பற்றி இரு தரப்பினரும் விவாதம் நடத்தினர். மனித நேய உதவி பொருட்களைக் கையாளுவதை விரைவுபடுத்து குறித்து, ஐ.நாவும், சூடான் அதிகார வட்டாரமும் ஒத்துழைப்பு மேற்கொண்டு, தொடர்புடைய விதிமுறைகளை எளிதாக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சூடானுக்கும் சாட்வுக்கும் இடையிலான ஆர்ட்லி எல்லை நுழைவாயில் 3 மாதங்களுக்கு திறந்து வைக்கப்படும் என்று சூடான் அரசு ஆகஸ்டு 15ஆம் நாள் அறிவித்தது.