இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 674.664 பில்லியன் டாலராக உள்ளது
2024-08-25 16:32:23

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 4.546 பில்லியன் டாலர் அதிகரித்து, 674.664 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என, அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணியின் முக்கிய பங்கான அந்நிய  நாணயத்தின் சொத்து மதிப்பு 3.609 பில்லியன் டாலர் அதிகரித்து 591.569 பில்லியன் டாலராக உள்ளது.  அதே வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 865 மில்லியன் டாலா் அதிகரித்து 60.104 பில்லியன் டாலாராக உள்ளது.

அதேபோல், பிறநாட்டு நாணய சிறப்பு எடுப்பு உரிமைகள் (எஸ்.டி.ஆர்) 60 மில்லியன் டாலர் அதிகரித்து 18.341 பில்லியன் டாலர்களாக உள்ளது

ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில்  அந்நிய செலாவணி கையிருப்பு 4.8 பில்லியன் டாலர் குறைந்து 670.119 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆகஸ்ட் 2 ஆம் தேதியின் போது இருந்த ஒட்டுமொத்த கையிருப்பு 674.919 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.