© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
வறுமையைக் குறைப்பதற்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஆகஸ்டு 26ஆம் நாள் கூறுகையில், வறுமை ஒழிப்பு, மனித குலத்தின் பொது கடமை மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க மக்களின் பொது விருப்பமாகும். இது சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புகளின் முக்கிய பகுதியாகவும் திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் கட்டுக்கோப்புக்குள், வறுமையைக் குறைப்பதற்கான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை இரு தரப்பும் மேற்கொண்டு, பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார்.
மேலும், விரைவில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சிமாநாட்டை வாய்ப்பாக கொண்டு, ஆப்பிரிக்காவுடன் இணைந்து, வறுமையைக் குறைப்பதற்கான போக்கினை முன்னேற்றி, ஆப்பிரிக்க மக்களுக்கு மேலும் இனிமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.