வங்காளத்தேசத்தில் வெள்ளப் பெருக்கால் 20 பேர் உயிரிழப்பு
2024-08-26 15:15:21

வங்காளத்தேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி ஆகஸ்ட் 25ஆம் நாள் வரை, வங்காளத்தேசத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கால் 52 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கால், 11 பிரதேசங்களைச் சேர்ந்த குறைந்தது 10 இலட்சம் குடும்பங்கள் இதில் சிக்கியுள்ளன. உள்ளூர் அரசு 3,654 தங்குமிடங்களை அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை மருத்துவச் சேவைகளை வழங்க 748 மருத்துவ குழுக்களைப் பரவல் செய்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கைச் சமாளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட 11 பிரதேசங்களுக்கு உள்ளூர் அரசு சுமார் 2 இலட்சத்து 93 ஆயிரத்து 779 அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.