© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

அண்மையில், சீனாவின் விசா இல்லா கொள்கை வெளியீட்டுடன், அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் பயணம் மேற்கொண்டனர்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஆகஸ்டு 27ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவின் பல்வேறு நுழைவாயில்களின் மூலம் சீனாவுக்கு வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது, சர்வதேச பயணியர் விமானச் சேவைகளின் எண்ணிக்கை ஒரு வாரத்துக்கு 6300ஐ தாண்டி, ஜுன் திங்கள் இறுதியில் இருந்ததை விட சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார்.
சீனாவின் தொடர்ச்சியான திறப்புக் கொள்கையும், மேம்படுத்தப்பட்டு வருகின்ற சேவையும், இதற்கு காரணங்களாகும். வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு வருவதற்கு வசதியை வழங்கும் பல நடவடிக்கைகள், சீனாவுக்கும் உலகத்துக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்து, வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்தி வருவதற்கான சீனாவின் மனவுறுதியைக் காட்டியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.