© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையில் உள்ள ஹம்பன்ந்தோட்டா சர்வதேச துறைமுகத்தின் வணிக செயல்பாட்டு அளவுகளில் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 40 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஹம்பன்ந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழு (HIPG) கடந்த திங்களன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் வளர்ச்சி அளவு இந்த ஆண்டு இறுதிக்குள் 50 சதவீதத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து துறைமுகத்தின் வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் பொது மேலாளர் லான்ஸ் ஜுவோ பேசும் போது, நெட்வொர்க்கிங் மற்றும் சந்தைப்படுத்துதல், துறைமுக செயல்பாட்டு நிர்வாகம் மற்றும் அதிகரித்து வரும் சரக்குகளை திறம்பட கையாளும் திறனை இது வெளிக்காட்டுவதாக கூறினார்.
இந்த சாதனை துறைமுக நிர்வாகத்தின் உறுதிப்பாட்டையும், அதன் செயல்திறன், தொடர்ச்சியான வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளையும் காட்டுவதாக கூறினார்.
எரிவாயு, கடல் சேவைகள் மற்றும் கொள்கலன் பிரிவுகளில் வளர்ச்சி காணப்பட்டுள்ளதாகவும், கடல் போக்குவரத்து சந்தையில் இத்துறைமுகம் முக்கிய பங்கு வகிப்பதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.