சீன-அமெரிக்க புதிய சுற்று நெடுநோக்கு தொடர்பு
2024-08-28 19:21:47

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவனுடன், ஆகஸ்டு 27 மற்றும் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் புதிய சுற்று நெடுநோக்கு தொடர்பு கொண்டு, மனமார்ந்த மற்றும் பயனுள்ள விவாதம் நடத்தினார்.

சீன-அமெரிக்க உறவு பற்றி வாங்யீ முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிகாட்டல், சீன-அமெரிக்க உறவு சரியான திசையை நோக்கி முன்னேறுவதற்கான முக்கிய அம்சமாகும். இரண்டாவதாக, மூன்று கூட்டறிக்கைகளைப் பின்பற்றுவது, சீனாவும் அமெரிக்காவும் மோதல் மற்றும் எதிரெதிர் நிலையைத் தவிர்ப்பதற்கான முக்கிய அம்சமாகும். மூன்றாவதாக, ஒன்றை ஒன்று சமமாக அணுகுவது, சீன-அமெரிக்கத் தொடர்பு மேற்கொள்வதற்கான முக்கிய அம்சமாகும். நான்காவதாக, மக்களின் விருப்ப அடிப்படையை வலுப்படுத்துவது, இரு நாட்டுறவின் நிதானமான வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாகும். ஐந்தாவதாக, சரியான கருத்தை உருவாக்குவது, இரு நாடுகள் அமைதியாக இருப்பதற்கான முக்கிய அம்சமாகும் என்று வாங்யீ தெரிவித்தார்.

ஜேக் சல்லிவன் கூறுகையில், சீனாவுடன் நெடுநோக்கு தொடர்பைத் தொடர்ந்து மேற்கொண்டு, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை அதிகரித்து, கருத்து வேறுபாடுகளைக் குறைக்க அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார்.