சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு குறித்து சீனா கருத்து
2024-08-28 18:52:26

சீனாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் ஆகஸ்ட் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சீனா மற்றும் ஆப்பிரிக்க மக்களின் அடிப்படை நலன்களை சீனா கருத்தில் கொண்டு, ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது. சீனாவின் வளர்ச்சி மூலம், ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும், சீன நவீனமயமாக்கம் மூலம் ஆப்பிரிக்காவின் நவீனமயமாக்கத்தையும் முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளை சீனா மதித்து, ஆப்பிரிக்க நாடுகளை சமமாக அணுகுகின்றது என்று தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை ஆதரிப்பது, சர்வதேச சமூகத்தின் பொது கடமையாகும். இதர நாடுகள் சீனாவைப் போல ஆப்பிரிக்காவுக்கான கவனத்தையும் ஒதுக்கீட்டையும் அதிகரிப்பதை சீனா வரவேற்கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் விருப்பத்தை மதிக்கும் அடிப்படையில் மூன்று தரப்பு மற்றும் பல தரப்புகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதை சீனா விரும்புகிறது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆப்பிரிக்காவின் செழுமை மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்தி, ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.