முதலாவது காலநிலை- அதி நுட்ப விவசாய முதலீட்டுத் திட்டத்தை தொடங்கிய இலங்கை
2024-08-28 17:17:08

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை தனது முதலாவது காலநிலை- அதிநுட்ப  விவசாய முதலீட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (எஃப்ஏஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த திட்டம் பசுமை காலநிலை நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுள்ளது. ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம், வேளாண் அமைச்சகம் ஆகியவற்றால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து  விவசாயத் துறையைப் பாதுகாப்பதற்கான விரிவான செயல்திட்டத்தை உருவாக்குவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வானிலை நிகழ்வுகளின் ஆபத்துகள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 நாடுகளில் இலங்கை உள்ளது. இந்த முதலீட்டுத் திட்டம் காலநிலை மாற்றத்திற்கு நெகிழ்திறன் கொண்ட விவசாய வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான ஒரு மூலோபாய மற்றும் விரிவான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.