ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையின் நிலைமை குறித்து குட்ரெஸ் கவலை
2024-08-29 10:00:18

இஸ்ரேல் ஆகஸ்ட் 28ஆம் நாள் ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையின் ஜெனின், துபாஸ் முதலிய இடங்களில் தொடுத்த பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளினால் உயிரிழப்புகளும் ஆக்கப்பணி உள்கட்டமைப்பில் சேதமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் தன்னுடைய செய்தித் தொடர்பாளர் அலுவலகம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அறிக்கையில், குழந்தைகள் உள்ளிட்ட உயிரிழப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச மனித நேயச் சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது தொடர்புடைய கடமைகளைப் பின்பற்றி, பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த அறிக்கையில் குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.