ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் கூட்டுக் கட்டுமானம் பற்றிய சீன-ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி அறிக்கை வெளியீடு
2024-08-29 14:48:41

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் கூட்டுக் கட்டுமானம் பற்றிய சீன-ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி குறித்த 2024 ஆம் ஆண்டு நீல அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, தற்போது, 52 ஆப்பிரிக்க நாடுகளும் ஆப்பிரிக்க ஒன்றியங்களும் சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக கட்டியமைக்கும் ஒத்துழைப்புப் புரிந்துணர்வுக் குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பால் சீன மற்றும் ஆப்பிரிக்காவின் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் புதிய நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல நாடுகளில்  சீனா கட்டியமைத்த மற்றும் சீரமைத்த இருப்புப் பாதையின் மொத்த நீளம் 10 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலாகும். அது போன்றே ஒரு இலட்சம் கிலோமீட்டருக்கும் நீளமான நெடுஞ்சாலை, சுமார் ஆயிரம் பாலங்கள் மற்றும் நூறு துறைமுகங்கள் போன்றவற்றையும் சீனா கட்டியமைத்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.