சீன மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஜேக் சல்லிவனுடன் சந்திப்பு
2024-08-29 19:35:35

சீன மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ட்சாங் யூசியா, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவனுடன் ஆகஸ்டு 29ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

ட்சாங் யூசியா கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துகளைச் செவ்வனே செயல்படுத்தி, “சான் பிரான்சிஸ்கோ விருப்பத்தை” உண்மையாக மாற்றுவதை முன்னேற்ற வேண்டும். இராணுவப் பாதுகாப்பு துறையில் நிதானமான நிலைமையை நனவாக்குவது, இரு நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது மட்டுமல்லாமல், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகும். அமெரிக்கா, சீனாவின் மைய நலன்களுக்கு மதிப்பளித்து, சீனாவுடன் இணைந்து இரு நாட்டுப் படைகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை முன்னேற்றி, பெரிய நாட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

மேலும், தைவான் விவகாரம், சீனாவின் மைய நலன்களிலுள்ள முக்கிய பகுதியாகும். தைவானுடன் இராணுவத் தொடர்பையும், தொடர்புடைய போலியான தகவல்களின் பரவலையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.