இலங்கையில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் திறப்பு
2024-08-29 17:29:37

இலங்கையில் திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய 350 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அந்நாட்டின் அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை திறந்து வைத்தார்.

தலைநகர் கொழும்பின் வடக்கு பகுதியில் உள்ள கெரவலப்பிட்டியவில் செயல்படும் இந்த மின் உற்பத்தி நிலையம், திரவ இயற்கை எரிவாயுவில் இயக்கக்கூடிய முதல் ஆலையாகும்.

இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், நாட்டின் மின்சார விநியோகத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட உள்கட்டமைப்பு திட்டமாக இந்த மின் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது.