விரைவில் தொடங்கவுள்ள சீன-அமெரிக்க வணிக அமைச்சகப் பணி கூட்டம்
2024-08-29 15:47:41

சீன–அமெரிக்க வணிக அமைச்சகங்களின் பணிக் கூட்டத்தைச் செப்டம்பர் 7ஆம் நாளில், சீனாவின் தியன் சின் மாநகரில் நடத்த சீன மற்றும் அமெரிக்க வணிக அமைச்சகங்கள் கலந்தாய்வு மூலம் தீர்மானித்துள்ளன.

இக்கூட்டத்தில், இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கை சார்ந்த கவனம் கொண்ட அம்சங்கள், தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு போன்றவை குறித்து இரு தரப்பும் பரந்த அளவில் விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளன.